தமிழ்த்தொடராண்டு 5126 பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியாறை வரவேற்பதற்கும் இந்நாளில், உலகளாவிய தமிழ்மக்களை வாழ்த்துவதற்குமானது இந்தக் கட்டுரை. 01,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126: ஓர் ஆண்டுக்கான காலத்தை 365 நாள் 15 நாழிகை 31 விநாழிகை 15 தற்பரை என்று தமிழ்முன்னோர் 5125 ஆண்டுகளுக்கு முன்னமே கணித்துள்ளனர். ஆண்டுக்கான காலம் முழுநாட்களாக மட்டும் இல்லாமல் சில்லறை நாழிகை விநாழிகை தற்பரையும் கொண்டுள்ளதால் முதலாவது ஆண்டு பிறப்பு காலை ஞாயிற்று தோற்றத்தில் (6மணி) தொடங்கிய நிலையில் அடுத்து அடுத்து வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 15 நாழிகை 31 விநாழிகை 15 தற்பரை கூடியே வரும். அந்த வகையில் 5126வது தமிழ்த்தொடராண்டு, நேற்றைய நாளின் 35வது நாழிகை 55 விநாழிகை 15வது தற்பரையில் (மாலை 9.15) பிறந்தது. 5126வது தமிழ்த்தொடராண்டு நேற்று இரவில் பிறந்ததால் சித்திரை ஒன்று, இன்று ஞாயிற்றுக் கிழமை, ஞாயிறு தோற்றத்தில் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்வோம். உலகளாவிய தமிழ்மக்கள் அனைவருக்கும், 5126வது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,949.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.