உள்ளாட்சி தேர்தல்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எதிர்காலத்தில் அதிகாரம் செலுத்துமோ! ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்தி வாக்காளர்கள் ஒரே நேரத்தில் 4 வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். பொதுவாக நகர்புறங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். பிற மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்குபெட்டி-வாக்குசீட்டு முறையே இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் அனைத்து பதவிகளுக்கும் இந்த தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், மேல்புரம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இந்த இயந்திரம் மூலமான வாக்குபதிவு கவனம் பெறவில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,379.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.