தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் 32,500 கனஅடி தண்ணீர் கருநாடகத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் 2 அணைகளில் இருந்தும் 17 ஆயிரத்து 481 கன அடி உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 7500 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் விரைவில் ஒகேனக்கல்லுக்கு வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் கொள்ளளவு 120 அடி என்ற நிலையில் தற்பொழுது அணையில் நீரின் கொள்ளளவு 101 அடி உள்ளதாகத் தெரியவருகிறது. ஆடி பதினெட்டு அல்லது ஆடி இருபத்தெட்டுக்குள் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தஆண்டு வானம் பொய்க்காமல், இயற்கை, 'ஒழுங்காக தமிழ்நாட்டிற்கு நிரைத் திறந்து விடு' என்று கருநாடகத்திற்கு ஆணையிடுகிற ஆண்டாக அமைகிறது. அடிக்கடி, கருநாடகம், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று முரண்டு பிடிப்பதும், அடிக்கடி, இயற்கை, 'ஒழுங்காக தமிழ்நாட்டிற்கு நிரைத் திறந்து விடு' ஆணையிடுவதும் வளமையாகி விட்டது. ஒன்றிய அரசு (கருநாடகாவை) என்றும்தண்டிக்காது என்றாலும், இயற்கை அவ்வப்போது நின்று (கருநாடகாவை) தண்டித்துக் கொண்டே இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,305.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.