முதன்முறையாக தேர்தல் அரசியலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது, நாம்தமிழர் கட்சி உள்ளாட்சித் தேர்தலில். 19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கன்னியாகுமரி மாவட்டம் இராசக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுனில் வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்திலுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான இடங்களில் அதிமுகவை திமுக வீழ்த்திக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இராசக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி இதுவாகும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியை உருவாக்கி நெருப்பாற்றில் நீந்திவரும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தோல்வியைக் கண்டு துவளாதவராய், ஒவ்வொரு தேர்தல்களிலும் கூட்டணி இல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறார். இந்தநிலையில், முதன்முறையாக தேர்தல் அரசியலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது, நாம்தமிழர் கட்சி உள்ளாட்சித் தேர்தலில். இதற்காகத்தான் உள்ளாட்சித் தேர்தலே தள்ளி வைக்கப் பட்டிருந்ததோ என்று இப்போது புரிகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,386.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.