Show all

மூன்றில் ஏதோவொரு காரணம் உண்மை! கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கவிருந்த முனைவர் பட்டம் ரத்து

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு மூன்று வகையான காரணங்களை முன்வைத்து விவாதங்களை ஓடவிட்டு, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறநெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது செய்தி ஊடக மேடை.

வைரமுத்துவுக்கு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தவிர்த்துவிட்டாதால், வைரமுத்துவுக்கு வேறொருவரின் கையால் முனைவர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். அது தன்னை அவமானப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்த வைரமுத்து, அடுத்தவர் கையால் முனைவர் பட்டம் பெறுவதை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆண்டாள் சர்ச்சையில் சிக்கியதால்தான் வைரமுத்துவுக்கு முனைவர் பட்டம் வழங்குவதை ராஜ்நாத் சிங் தவிர்த்து விட்டதாகவும், அதையொட்டி- வைரமுத்து, அடுத்தவர் கையால் முனைவர் பட்டம் பெறுவதை ஏற்க மறுக்க திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட்டதாக  மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மீது தான் ஏற்கனவே தெரிவித்த புகாரையே சின்மயி, மீண்டும் தூசிதட்டிப் பதிவிட்ட நிலையில், இன்று திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழக விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு, இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டாக்டர் பட்டம் வழங்கவிருந்த முனைவர் பட்டத்தை, ஒற்றைக் கீச்சுப் பதிவு மூலம், சின்மயி காலி செய்து விட்டதாக, சின்மயி ஆதரவாளர்கள் ஒருபக்கம் செய்தி பரப்பி மகிழ்ந்து வருகின்றனர். மூன்றில் ஏதோவொரு காரணம் உண்மை! கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கவிருந்த முனைவர் பட்டம் ரத்து

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,380.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.