தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பற்றி இதழியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு. பதிலளித்த ரஜினிகாந்த், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என தெரிவித்தார். 06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம். இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என குறிப்பிட்டார்- கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்று நேற்று சென்னை திரும்பியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த். மேலும், தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பற்றி இதழியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு. பதிலளித்த ரஜினிகாந்த், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என தெரிவித்தார். இரஜினி, தமிழகத்தில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் அற்புதம் நிகழும் என்று தெரிவித்ததால் அந்த அற்புதம் என்னவாக இருக்கும் என்ற தேடலில் அரசியல் தலைவர்களை வழிநடத்தத் தொடங்கி விட்டனர் ஊடகத்தினர். தங்களுக்கு ஏதாவது அதிசயம் நிகழ்ந்து இலக்குதரம் (டிஆர்பி) உயர்ந்தால் சரி என்பதாக. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியபோது- அடுத்தப் பொதுத்தேர்தலில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருக்கலாம். என்று தங்கள் சார்பான நப்பாசையை வெளிப்படுத்தினார். ஆம்! அதிசயம் நிகழும். 'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்” என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் வருவிருக்கும் தமிழகப் பொதுத் தேர்தலில் நடந்தே தீரும் என்கிறார் சீமான். அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையவிருக்கிறார் பெங்களூரு புகழேந்தி. அதற்கு முன்பாக, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமமுகவுக்குப் போட்டியாக ஆதரவாளர்களைத் திரட்டி கூட்டம் நடத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக அமமுக போட்டி கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்தில் இதழியலாளர்களிடம் பேசிய புகழேந்தி, நடத்துநர் சிவாஜிராவாக சென்னைக்கு வந்த ரஜினிகாந்த் அதீத மின்மினியாக மாறியது ஆச்சர்யம் இல்லையா? ரஜினிகாந்த்தை ஒரு திருப்புமுனையாக நினைத்தீர்களென்றால் ஏமாந்துவிடுவீர்கள். அவர் ஏற்கெனவே பல ஆண்டுகளாக இரசிகர்களை ஏமாற்றி வருகிறார். வரவிருக்கும் தமிழகப் பொதுத் தேர்தலிலும், அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்பார். வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்காமல் இந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார் என்று அவர் பேசினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,344.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.