கல்லக்குறிச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நிகழ்த்தும் மூத்த தமிழறிஞர்களுக்கு முடிசூட்டு விழா-02 என்கிற நிகழ்ச்சியின் அழைப்பை, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழ்நாடு அரசின், தமிழ்வளர்ச்சித்துறை கண்ட தமிழ்த்தொடராண்டு-5124அணி. தமிழறிஞர். இல.இரவி அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை வாழ்த்தி வரவேற்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5126: அழைப்பிதழ் கொண்டிருக்கும் தகவல்: விழாவிற்கான நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும். விழாவில் நேரில் கலந்து கொள்பவர்கள் மட்டுமே விருதுக்கு விண்ணப்பிக்கவேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் 1. விண்ணப்பதாரரின் வயது 58-க்கு மேல் இருக்கவேண்டும். 2. வயதுச்சான்றாக (ஆதார், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம்) இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைக்க வேண்டும். 3. ஆண், பெண் இருபால் தமிழ்ச்சான்றோர்களும் (இந்திய அளவில் மட்டும்) விண்ணப்பிக்கலாம். 4. கடவுச்சீட்டு புகைப்படத்துடன் கூடிய தன் விவரக்குறிப்பு இணைக்கப்படவேண்டும். 5. தங்களைப்பற்றிய சுய குறிப்பு அடங்கிய தன் விவரக்குறிப்புகள் அஞ்சல் மற்றும் கொரியர் மூலமாக மட்டுமே, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். 6. விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில் 50 தமிழ்ச்சான்றோர்கள் மட்டுமே தேர்வுசெய்யப்படுவார்கள். தேர்வுக்குழுவின் தீர்ப்பே இறுதியானது. 7. சென்ற ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு (தற்போதைய விண்ணப்பத்தில் அதை குறிப்பிட்டு அனுப்பினால்) முன்னுரிமை அளிக்கப்படும். 8. நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை (தங்களின் சுய விருப்பத்தின்பேரில் சங்கத்தின் பெயரில் நன்கொடை வழங்கலாம். அது, விழாவிற்கு உதவிகரமாக இருக்கும்) கட்டாயமல்ல. 9. விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 10.01.2025 மாலை 5.45 மணிக்குள், விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:- தொடர்புக்கான செல்பேசி எண்கள்: 9788572135, 8825793659, 7010205867,8608353532
கல்லக்குறிச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நிகழ்த்தும் மூத்த தமிழறிஞர்களுக்கு முடிசூட்டு விழா-02 வழங்கவிருக்கும் விருதின் பெயர்: தகைசால் தமிழ்ப்பணிச் செல்வர்.
கவிஞர்.இதயம்கிருட்டிணா, தமிழ்கம்பியூட்டர்ஸ், 15, அக்ரஹாரத்தெரு, தியாகதுருகம் அஞ்சல், கல்லக்குறிச்சி மாவட்டம் - 606206.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,202.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.