தனியார் தொலைக்காட்சி
ஒன்றுக்கு தொல் திருமாவளவன் அளித்த பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த்
அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன். ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால்
அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார். ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை
ஆள வைத்து விடுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார். தமிழக அரசு செயலிழந்து கிடப்பதாக தெரிவித்த திருமாவளவன் அதிமுக இரு தரப்பினரும்
ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் திட்டங்கள் எதுவும்
நடைமுறைக்கு வரவில்லை, மாறாக அனைத்தும் கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மோடி அரசு மாட்டு
வணிகத்தை கார்ப்பரேட் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாட்டுக்கறிக்கான தடை இந்தியா
முழுமையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்தார். பாஜக தமிழகத்தில்
காலூன்ற வாய்ப்பில்லை எனவும் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ் தெரிந்த, தமிழ்மக்கள் அறிந்த ஒருவர் பிரதமர்
ஆவதை நாமும் வரவேற்போம்; வாழ்த்துக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.