Show all

ஊரே கூடி புறக்கணித்தவர் ஊராட்சி மன்றத் தலைவி! இடஒதுக்கீட்டிற்கான தேவை இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

பெரும்பான்மைச் சமூகத்தினர் தேர்தலைப் புறக்கணித்ததால், வெறும் 13 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில், 10 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் இராஜேஸ்வரி. வெற்றி இடஒதுக்கீட்டுக்கு!

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் மொத்தம் 785 வாக்காளர்கள் உள்ளனர். இதில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் மட்டுமே பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள். இடஒதுக்கீட்டில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரும் பான்மைச் சமூகம் தேர்தலைப் புறக்கணித்தது. 

இதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, சுந்தராச்சி ஆகிய இரு பட்டியலினப் பெண்கள், தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தனர். பெரும்பான்மைச் சமூகத்தினர் தேர்தலைப் புறக்கணித்ததால், வெறும் 13 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில், 10 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் இராஜேஸ்வரி.

அந்தச் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும், ஒண்ணு, ரெண்டு குடும்பத்தினர்தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவுக்குத்தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுக்கு முந்தைய உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பின் போது தலைவர் பதவியை பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதெல்லாம் முடியாது என்று கறுப்புக்கொடி காட்டி ஊரே திரண்டு போராட்;டம் நடத்தியிருந்தனர். தற்போது தேர்தலையும் புறக்கணித்த நிலையில் பட்டியல் இனத்திற்கான ஒதுக்கீட்டிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

பழந்தமிழர் தொழிற்பிரிவாக முன்னெடுத்திருந்த சாதியை, ஜாதி என்பதாகப் பிறப்படிப்படையாக்கி:- “சாதிகளுக்குள் எந்த சாதி உயர்ந்தது என்கிற குழப்ப நிலையும்- அதற்கான வன்முறைகளும், பார்ப்பனியர்கள் எப்போதும் எல்லோருக்கும் உயர்ந்தவர்கள் என்கிற உறுதிநிலையுமான” பார்ப்பனிய ஆதிக்கவாத வேதாந்த அறியாமை இந்த ஊர் மக்களிடம்  களையெடுக்கப்படாத நிலையில், இடஒதுக்கீடு இனியும் தேவையா என்று சில ஆதிக்கவாதிகளின் கேள்வியை தூக்கிவீசிவிட்டு, இடஒதுக்கீட்டிற்கான தேவை இன்றும் இருந்து கொண்டிருக்கிறது என்று உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளவர்களாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,392.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.