Show all

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

மேற்குதொடர்ச்சி மழைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2329 கனஅடியில் இருந்து 4169 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 21.86 அடியாகவும், நீர் இருப்பு 4.65 டிஎம்.சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.