Show all

தமிழ்நாடுநாள்- கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாகி விட்டது! அடுத்து உலக அளவில்; வெளியாகியது தமிழி அத்தியாயம்- 5

தமிழக அரசு சார்பில் முதல் முறையாக ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீச்சுவில் ‘தமிழ்நாடுநாள்’ இந்திய அளவில் தலைப்பாகி விட்டது. உலக அளவிலும் தலைப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் இன்று ஆதியின் “தமிழி” ஐந்தாவது அத்தியாயம் வெளியாகி பார்வைகள் பல்லாயிரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு மாநிலம் உருவான நாள் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் “தமிழி” குறும்படம் ஐந்தாவது அத்தியாயம் இன்று காலை மணி பதினென்றுக்கு வெளியாகி பார்வைகள் வளர்ந்து வருகிறது. விருப்பங்களை அள்ளி வருகிறது. 

ஐந்தாவது அத்தியாயத்தின் சிறப்பு சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதற்கான காரணங்களை அடுக்குவதுதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,323.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.