Show all

தமிழர் எதிர்பார்ப்பு - சல்லிக்கட்டின் மீதான தடை தானாக விலகிப் போவதற்கான அவசரச்சட்டமே

சல்லிக்கட்டுக்கு தடை விவகாரத்தில் - தடை விதித்த  உச்சநீதி மன்றத்தையோ, தடை கோரிய பீட்டா அமைப்பையோ,

தன்னெழுச்சியாக போரட்டத்தில் களமிறங்கியுள்ள மாணவர்களோ, தமிழ் மக்களோ, ஒரு பொருட்டாக கருதேவேயில்லை.

ஏனென்றால்- அரசு இயற்றுகிற, சட்டத்தை நெறிப் படுத்துகிற, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிற, வேலைக்கார நிருவாகம்தான் நீதிஅரசர்கள் நீதிமன்றம் எல்லாம்.

சட்டத்தின் ஒட்டை உடைசல்களை தங்கள் நோக்கத்;திற்கு தோதாகப் பயன் படுத்திக் கொண்டதுதான் பீட்டா அமைப்பு.

இங்கே  தன்னெழுச்சியாக போரட்டத்தில் களமிறங்கியுள்ள மாணவர்களோ, தமிழ் மக்களோ, எதிர் நோக்கி யிருப்பது -

மக்கள் பிரதிநதிகளாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நடுவண் அரசின்,

சல்லிக்கட்டின் மீதான தடை தானாக விலகிப் போவதற்கான அவசரச் சட்டத்தை மட்டுந்தாம்.

நள்ளிரவிலிருந்து ரூபாய்தாள் செல்லாது என்று அவசரசட்டம் போட்ட மோடியிடம்-

சல்லிக்கட்டுக்கான தடை அகலுவதற்கான அவசர சட்டத்தை எதிர் நோக்கியிருக்கின்றனர் தமிழ் மக்கள்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.