தில்லியில் பிரதமர்
நரேந்திரமோடியை புதன்கிழமை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வணக்கம் தெரிவித்த முதல்வர்
எடப்பாடி கே.பழனிசாமி. மத்திய திட்டங்களுக்காக மாநில அரசு செலவிட்ட தொகையில்
நிலுவையில் வழங்கப்பட வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று தில்லியில்
பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார். தில்லிக்கு இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக
செவ்வாய்க்கிழமை இரவு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது
இல்லத்தில் புதன்கிழமை காலை 11.15 மணிக்கு சந்தித்துப் பேசினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,
செயலாளர் சிவதாஸ் மீனா, முதல்வரின் உறவினர் மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர். சுமார்
40 நிமிஷங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம்
முதல்வர் பழனிசாமி அளித்தார். சரக்குசேவை வரின்னு, வரி வாங்கும் உரிமையை நடுவண்
அரசு ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளப் போகிறதே! அந்தத் தொகைகளை
யெல்லாம் வாங்குவதற்கு கொத்தடிமைகளாக மாநில பஞ்சாயத்துகள் இனி, நடுவண் அரசிடம் கையேந்தி
நிற்க வேண்டுமா?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.