Show all

சீமானுக்கு எதிரான மிரட்டல் காணொளி! வெளியிட்ட நபர்கள் கைது- அவர்கள் நோக்கம் குறித்து தீவிர விசாரணை

டிக்-டாக் காணொளியில் கத்தியைக் காட்டி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஐந்து நபர்கள் தாம்பரத்தில் பிடிபட்டனர், கைது செய்து அவர்கள் நோக்கம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர்.

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக கருத்துக்களை பதிவிடுகின்றனர்.

சில நேரங்களில் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் காணொளிக் காட்சிகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக செல்பேசியில் டிக்டாக் காணொளி ஒன்று பரப்பப்பட்;;டு வந்தது.

சுமார் 15 விநாடிகள் ஓடும் அந்தக் காணொளியில் 5 நபர்கள் கையில் கத்தியுடன் கானா பாடல் ஒன்றை பாடுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காணொளிக் காட்சியில் சீமானை அவதூறாக பேசி மிரட்டுவது போன்ற வசனங்கள் இருந்தன.

இதுகுறித்து தாம்பரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அஜித், கிஷோர், நிஷாந்த், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 5 பேர் அந்த டிக்டாக் காணொளியை வெளியிட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கையில் ஆயுதங்களுடன் கும்பலாக சுற்றியதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 4 பேர் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது தெரிய வந்த நிலையில், இந்தக் காணொளி வெளியீட்டின் அடிப்படை நோக்கம் என்னவாக இருக்கும் என்ற நோக்கத்தில்  அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,375.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.