Show all

அன்னைத் தமிழில் போற்றி திட்டம்! சென்னை கபாலீசுவரர் கோயிலில் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு

இன்று முதல் தமிழ்நாட்டு அறநிலையத் துறைக்குச் சொந்தமான 47 கோயில்களில் ‘அன்னைத் தமிழில் போற்றி’ என்ற பெயரில் தமிழில் போற்றியை ஒலிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் தமிழில் போற்றியை ஒலிக்கும் வகையில், அதன் தொடக்கமாக ‘அன்னைத் தமிழில் போற்றி திட்டம்’ சென்னை கபாலீசுவரர் கோயிலில் தொடங்கியது.

தமிழ்நாட்டில்; அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதலைமைச்சர் தெரிவிப்பார் என்று கூறிய தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தமிழில் போற்றி ஒலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கான அறிவிப்பு நாளது 18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (03.08.2021) வெளியானது.

இந்தத் திட்டத்தை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தமிழில் போற்றி திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அதன்படி, இன்று முதல் தமிழ்நாட்டு அறநிலையத் துறைக்குச் சொந்தமான 47 கோயில்களில் ‘அன்னைத் தமிழில் போற்றி என்ற பெயரில் தமிழில் போற்றியை ஒலிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.