முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இருந்த போதிருந்து அதிமுகவில் முதன்மையாளர் பட்டியலில் அமைந்து வலம் வந்தவரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் காலமானார். மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் பி. எச். பாண்டியன். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இருந்த போதிருந்து அதிமுகவில் முதன்மையாளர் பட்டியலில் அமைந்து வலம் வந்தவரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என 2ஆகப் பிரிந்தபோது ஜானகி அணியில் இடம் பிடித்தார். ஜானகி அணி சார்பாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஒரே ஒரு நபர் இவர்தான். இவர் மகன் மனோஜ் பாண்டியன் அதிமுகவின் முதன்மைப் புள்ளியாக வலம் வருபவர். இன்று காலை பி. எச். பாண்டியனுக்கு உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்தொடர்ஆண்டு-5088 ல் (ஆங்கிலம்1986) திமுகவின் பத்து உறுப்பினர்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக சட்டப்பேரவையிலிருந்து நீக்கப்பட்டபோது, சட்டப்பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நிலைநாட்டினார். ஆனால் தவறான நோக்கத்திற்காக (ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராக) வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தினார் என்கிற கரும்புள்ளி அவர் மீது தமிழக வரலாற்றில் அவர்மீது பதியப்பட்டு விட்டது. அதற்கு இரு ஆண்டுகளுக்கு பின்னர் எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக பி.எச்.பாண்டியன் ஜானகியை ஆதரித்தார். ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,387.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.