சசிகலா அணி அதிமுக, டிடிவி தினகரன் அணி அதிமுக,
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்று அணிகள் பல கண்ட நிலையில் ஓ.பன்னீர் அணியில் இருந்து
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியேறுகிறார். அங்க சுற்றி இங்க சுற்றி இப்போது ஓ.பன்னீர் அணியிலும்
கருத்து மோதல்கள், முட்டல் விவகாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இது சசிகலாவையே எதிர்க்க
துணிந்த ஓ.பன்னீருக்;கு கொஞ்சம் தள்ளாட்டம்; கொடுத்துள்ளது என்கிறார்கள் தேனி மாவட்ட
அதிமுகவினர். சசிகலாவை தைரியமாக எதிர்க்க முடிந்த பன்னீருக்கு
தனது அணியில் பெருகிவிட்ட அதிருப்தியை சமாளிக்க முடியவில்லை என்றும், அதனால் தான் அவர்
மூலிகை ஓய்வுக்ககு சென்றுவிட்டார் என்றும் கூறுகிறார்கள் அதிமுகவில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்
பிறகு அதிமுக, ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தலைமையில் ஒரு அணியாகவும் இப்போது பிரிந்து செயல்படுகிறது. பன்னீர்செல்வம் அணிக்கு 12 சட்டமன்றஉறுப்பினர்கள்,
12 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவு தெரிவித்து சசிகலாவிடமிருந்து பிரிந்து வந்தனர்.
இதன் பிறகு ஓ.பன்னீர் அணி தரப்புக்கு வேறு சட்டமன்றஉறுப்பினர்கள். அல்லது பாராளுமன்ற
உறுப்பினர்கள் , மாவட்ட செயலாளர்கள் என்று யாரும் வரவில்லை. இதில் ஓ.பன்னீர் அணி கலங்கிப்
போயுள்ளது. அதிமுக தொண்டர்களின் பலத்தை முழுமையாக என்பக்கம்
இழுத்துவிடுகிறேன் என்று சபதமிட்ட ஓ.பன்னீர் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார்.
காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் என்று தமக்கு சாதகமான இடங்களில் கூட்டம் கூட்டினார்.
திண்டுக்கல்லிலும் கூட்டம் நடத்தினர். அதற்கு அடுத்த நாள் டெல்லி. தம்முடைய முடிவு எதையும் நத்தம் விசுவநாதனிடம்
ஓ.பனனீர் ஒன்றும் சொல்லவில்லை என்றும் அதில் மிகுந்த கடுப்பில் நத்தம் இருக்கிறார்
என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப்பிறகு ஓ.பன்னீர்
நடவடிக்கைகள் தனித்தே உள்ளன என்றும், அவரும் கேபி முனுசாமியும் மட்டும்தான் ஆலோசனை
நடத்துகிறார்கள் என்றும் நத்தம் தரப்பு கொந்தளிக்கிறது. இது தொடர்கதையாகிவிட்டது. நத்தம் விசுவநாதன் விரைவில் ஓ.பன்னீர் அணியிலிருந்து
பழனிச்சாமி அணிக்கு இடமாறுதல் ஆகலாம். இல்லையென்றால் அரசியலை விட்டு ஒதுங்கி ஓய்வு
எடுக்கலாம் என்ற மன நிலையில் இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.