அயல் கோட்பாடுகளுக்கு எதிராக நிற்கிற சீமானைப் பாராட்ட நினைக்கும் போது, அயல் கொண்டாடும் மனிதர்களைக் காயப்படுத்தி புதிராகிப் போகிறார் சீமான். அயல் கோட்பாடுகளுக்கு எதிராக நிற்பது நல்லது சீமான். அயல் கொண்டாடும் மனிதர்களைக் காயப்படுத்தி புதிராக வேண்டாம். எனெனில் தமிழ்நாட்டில் பல்வேறு அயல்களுக்கு முட்டுக்கொடுத்து கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழர்களே என்பதை நினைவில் நிறுத்துங்கள் என்று சீமானை ஆற்றுப்படுத்துவதற்கானது இந்தக் கட்டுரை. 11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியில் தனது உறவினருக்கு இடம் வழங்கியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பைத்தியம் என சுட்டிவிட்டதற்கு சீமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு எண்ணிம ஊடகம் மற்றும் இதழியலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அயல் கொண்டாடுகிறவரில் முதன்மையானவரான, தமிழ்நாடு பாஜக கிளைத் தலைவர் அண்ணாமலைக்கும் சீமானுக்கும் வேறுபாடு இல்லாமல் இருக்கிறது என்று சீமானை நேர்ப்படுத்த முயன்றுள்ளனர் அவர்கள். அப்போது, தன்னை நோக்கி கேள்வி எழுப்பிய அந்த செய்தியாளரிடம் ஒருமையில் பேசியதுடன், பைத்தியக்காரன் என்பது போன்ற சொல்லாடலை சீமான் முன்னெடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு கண்டனத்திற்கு ஆளானது. இதுகுறித்து கீச்சுவில் பதிவிட்டு இருக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம், 'சென்னையில் இன்று இதழியலாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர் கரிகாலனை தரக்குறைவாக பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கண்டித்து தெரிவித்துள்ளது. மேலும், சீமான் அவர்களது இந்தச் செயலை தமிழ்நாடு எண்ணிம ஊடகம் மற்றும் இதழியலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கேள்விகளே நம்மைச் செதுக்கும் என மேடைகளில் பேசும் திரு. சீமான் அவர்கள், அதற்குத் தகுந்தாற்போல நடக்கும் வகையில், தன்னுடைய செயல்பாட்டிற்கு வருத்தத்தைப் பதிவு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். என்று குறிப்பிட்டு இருக்கிறது.
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், அவரது மைத்துனருக்கு தேர்தலில் போட்டியிட இடம் வழங்கியது குறித்தும், சவுக்கு சங்கரின் பேச்சு குறித்தும் செய்தியாளர் கரிகாலன் என்பவர் கேள்வி எழுப்பினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,474.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.