சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சரக்கு
மற்றும்சேவை வரி விதிப்பை கண்டித்து சென்னையில் லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.
ராஜேந்தர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசிதாவது: சம்பாதிக்கும்
பணம் அனைத்தும் வரிக்கே போய்விடுகிறது. வருமானவரி முதல் சரக்கு மற்றும்சேவை வரி என அனைத்து
வரிகளையும் போட்டு இந்தியர்களை ஒரு வரிக்குதிரையாக மாற்றிவிட்டார் மோடி. மன்னர் ஆட்சியில் கூட இல்லாத வரி மக்களாட்சியில்
விதிக்கப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது. வரி, வரி என மக்களுக்கு வலியைத்தான் கொடுப்பீர்களா
என்றும் ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி
ஆட்சி இந்தியாவில் வந்தால் ஆனந்தபவனாக இருக்கும் என நினைத்தால் கையேந்தி பவனாக மாறிவிட்டது
என்றும் டி. ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.