ஒரு கோடி ரூபாய்
இழப்பீடு தரக்கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 3 தனியார்
பால் நிறுவனங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள்
பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டினார். பாலில் கலக்கப்படும் வேதிப்பொருளால் குழந்தைகளின்
உயிருக்கு ஆபத்து என்றும் அவர் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாலில் கலப்படம் இல்லை என்பது உறுதியானால் தூக்கில்
தொங்குவேன், பதவி விலகுவேன் என்றும் தெரிவித்தார். அமைச்சரின் இந்தப் பேச்சுகள் அரசியல்
வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் நிறுவன பால் பைகள் ஆய்வுக்காக
புனே மத்திய உணவு பாதுகாப்புத்துறைக்கு அனுப்பப்பட்டது. அதில் பாலில் கலப்படம் இல்லை
எனத் தெரியவந்தது. இதையடுத்து பால் தூளில் கலப்படம் செய்யப்படுவதாக
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார். நெஸ்ட்லே உள்ளிட்ட நிறுவனங்களின் பால்
பைகளையும் செய்தியாளர் சந்திப்பின் போது காட்டினார். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு கோடி
ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என 3தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மீது வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனு உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்
எஸ். கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல்
தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் குறித்து அமைச்சர் பேசக்கூடாது என்று
அறங்கூற்றுவர் கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில்
மனு தாக்கல் செய்யவேண்டும் என்று அமைச்சர் உள்ளிட்டோருக்கு அறங்கூற்றுவர் உத்தர விட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.