Show all

திருப்பூர் மாவட்டக் கருவூலப் பணிப்பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! செம்பணியைப் பாராட்டி மகிழ்கிறோம்

அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகையை, பயனாளிகளுக்கு காலத்தே கிடைக்கும் வகைக்கு, செம்பணியாற்றியுள்ள, தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலக பணிப்பொறுப்பாளர்களுக்கும், செம்பணிச்செம்மல்களின் முதலாவது அலுவலகம் தங்கள் அலுவலகமே என்று நிறுவியுள்ள திருப்பூர் மாவட்டக் கருவூலப் பணிப்பொறுப்பாளர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பிக்கிற அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உடனுக்குடன் சிறப்பு பயண அட்டை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துதறை பணிப்பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கும், செம்பணியைப் பாராட்டி மகிழ்வதற்கும் உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் தமது அகவை முதிர்ந்த காலத்தில் வறுமையில் வாடக்கூடாது என்கிற சீரிய நோக்கில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி என்கிற திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்த்தொடராண்டு 5080லிருந்து  (1978) முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

மாதந்தோறும் ரூபாய் 3500 ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 500 மற்றும் தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கட்டணமில்லாப் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த உதவித்தொகை அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுவதாகும். உதவித்தொகை பெறுபவரின் மறைவிற்குப்பின் அவரின் மரபுரிமையருக்கும் வாழ்நாள் முழுவதும் ரூபாய் 2500 ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 795 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அவ்வகையில், 5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அரசாணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.சாமிநாதன் அவர்களின் பொற்கரங்களால் 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126: (07.08.2024) புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சென்னைப் பலகலைக்கழகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் கூட்ட அரங்கத்தில் வழங்கப்பட்டது.

இந்த அரசாணையின் தொடர்நடவடிக்கையாக நூறு தமிழ் அறிஞர்களுக்கும் ஓய்வுதியம் அனுப்பும் வகைக்கான பணிப்பொறுப்பை தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலகம் முடித்து தமிழ்நாட்டின் அனைத்துக் கருவூலங்களுக்கும் அனுப்பிவிட்டது என்பதை திருப்பூர் மாவட்டக் கருவூலப் பணிப்பொறுப்பாளர்கள் செம்பணி மூலம் அறிய முடிகிறது.

திருப்பூர் மாவட்டக் கருவூலம், அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகைக்கு அரசாணை பெற்றுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.அ.மனோகரன், திரு.வெ.மோகனசுந்தரம் ஆகிய இருவருக்கும், தங்கள் வங்கிக் கணக்கிற்கு உதவித் தொகை பெறும் வகைக்கு நிழற்படம், வங்கிகணக்கு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க முதலாவதாக அழைப்பு அனுப்பியுள்ளது.

இந்த அழைப்பில் அமைந்துள்ள உள்ளடக்கத்தின் மூலமே தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலகத்தின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நூற்றுவர் பயனடைவதற்கான செம்பணி முடிக்கப்பட்டுவிட்டது என்கிற தகவலை அறியமுடிகிறது.

திருப்பூர் மாவட்டக் கருவூலப் பணிப்பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! செம்பணியைப் பாராட்டி மகிழ்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பிக்கிற அகவை  முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உடனுக்குடன் சிறப்பு பயண அட்டை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை பணிப்பொறுப்பாளர்களையும் பாராட்டி மகிழ்கிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,162. 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.