உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் வருகையாளர்களுக்கு இலட்டு படையல் வழங்கப்படவுள்ளது. 21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம் முழுவதும் முருகன் கோயில்கள் பஞ்சாமிர்தத்திற்கு புகழ் பெற்றவை. ஆனால் கோயில் சார்பாக பஞ்சாமிர்தம் படையலாக வழங்கப்படுவதில்லை. திருப்பதி கோயில் இலட்டுக்கு புகழ் பெற்றது. திருப்தி கோயில் சார்பாக இலட்டு படையலாக வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், திருப்பதி போல, கோயில் சார்பாக வருகையாளர்களுக்கு, இலட்டு படையல் வழங்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. கோயில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை இலட்டு படையல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,329.
இனி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், 30 கிராம் இலட்டு படையலாக வழங்கப்படவுள்ளது. கோயிலுக்கு வரும் அன்பர்கள், மீனட்சி அம்மனை வணங்கிவிட்டு, சொக்கநாதரை பார்க்கச் செல்லும் வழியில் அன்பர்களுக்கு இந்த இலட்டு படையல் வழங்கப்படவுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.