கொல்கத்தா உயர்
அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு
எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அறங்கூற்றுவர் சி.எஸ்.கர்ணன்
கொல்கத்தா உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவராக உள்ளார். அவர் மீதான அறங்கூற்று மன்ற
அவமதிப்பு வழக்கு உச்ச அறங்கூற்று மன்ற தலைமை அறங்கூற்றுவர் ஜே.எஸ்.கேஹர், அறங்கூற்றுவர்கள்
தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்கூற்றுத் துறைக்கு எதிராக செயல்பட்டதாகக்
கூறி அறங்கூற்றுவர் கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உச்ச அறங்கூற்று
மன்ற தலைமை அறங்கூற்றுவர் ஜே.எஸ்.கேஹர், அறங்கூற்றுவர்கள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர்,
ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அறங்கூற்றுவர்
என்பதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் தலைமை அறங்கூற்றுவர் கூறியுள்ளார்.
அறங்கூற்றுவர் கர்ணன் பேட்டியை ஊடகங்கள் ஒளிபரப்ப உச்ச உச்ச அறங்கூற்று மன்ற தலைமை
அறங்கூற்றுவர் ஜே.எஸ்.கேஹர், அறங்கூற்றுவர்கள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய்,
மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் தடை விதித்துள்ளனர். மேற்கு வங்க காவல்துறையினர் உடனடியாக அறங்கூற்றுவர்
கர்ணனை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையடுத்து அவரை கைது செய்வதற்காக
கொல்கத்தா காவல்துறையினர் காளஹஸ்தி விரைந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. ஒரு அறங்கூற்றுவரை எப்படி கைது செய்ய உத்தரவிட
முடியும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அறங்கூற்றுவர் கர்ணனுக்கு சிறை தண்டனை
விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
தெரிவித்துள்ளார். மேலும், அறங்கூற்றுவர் கர்ணனை மனநலம் பாதிக்கப்பட்டவர்
என கூறுவது மிகமிக கண்டனத்திற்குரியது. உச்ச அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள் செயல்
மக்களாட்சி தத்துவத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.