Show all

ஒரே ஒருநாள் இடைவெளியில் சல்லிக்கட்டை வென்றெடுக்க வேண்டிய நெருக்கடி தமிழர்களுக்கு

சல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

     பொங்கல் நடைபெறுவதால் சல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

     தமிழகத்தில் சல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

     இந்நிலையில் சல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. பொங்கல் விழாவிற்கு முன்பு தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம், தற்போதுதான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்குவது சாத்தியமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.   தமிழ்மக்களின் ஐயாயிரம் ஆண்டு கால பாரம்பரியத்தை புரிந்து கொள்ளவியலாத நீதியரசர்கள்  கையில் தாம் உச்ச நீதிமன்றப் பெறுப்பு இருக்கிறது என்பதையும் இந்தியாவை ஆளும் பொறுப்பேற்றிருக்கிற ஆளும் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்கள் மாநிலத்திற்கான பிரதிநிதிகளாக இல்லை யென்பதையும் உணர்த்துவதாக உள்ளது இந்தத் தகவல்.

     அவைகளையும் தாண்டி ஒரே ஒருநாள் இடைவெளியில் சல்லிக்கட்டை வென்றெடுக்க வேண்டிய நெருக்கடி தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.