தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவர் ரஜினிகாந்த்
என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழர் அல்லாதவர்
என ரஜினியை எதிர்ப்பதில் உடன்பாடில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளனர். அண்மையில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்
போருக்கு தயாராக இருங்கள், போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அரசியலுக்கு
பலமே எதிர்ப்புதான் என்றும் அவர் கூறினார். ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு அவர் நிச்சயம் அரசியலுக்கு
வரும் திட்டத்தில் உள்ளார் என்பதை வெளிப்படுத்தியது. இதையடுத்து அவரை வளைத்துப்போட
தேசியக் கட்சிகள் பெரும்பாடு பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு கன்னடர். அவர் தமிழக
அரசியலுக்கு வரக்கூடாது என தமிழ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி, தமிழக வாழ்வுரிமை கட்சி
தலைவர் வேல்முருகன் உள்ளிடோர் கன்னடரான ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் திருநாவுக்கரசர், திருமாவளவன், ஸ்டாலின்,
ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றனர்.
ஒருபக்கம் ரஜினி அரசியலுக்கு வர எதிர்ப்பு இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் இருந்து
வந்தது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த
திருமாவளவன், தமிழர் அல்லாதவர் என ரஜினியை எதிர்ப்பதில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.
தானும் தமிழ்தேசியத்தை சேர்ந்தவன்தான் என்று கூறிய திருமாவளவன் ரஜினி அரசியலுக்கு வரகூடாது
என நடத்தப்படும் போராட்டங்களில் தனக்கு உடன்பாடில்லை என்றார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி தமிழகத்தில்
வசித்து வருகிறார் என்றும் திருமாவளவன் கூறினார். ரஜினிகாந்த் தமிழர்களின் உணர்வோடு
இரண்டறக் கலந்துள்ளார் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கணீர் பேச்சு, தெளிவாகத் திட்டமிடல், ஏராளமான நற்பணிகளில்
ஈடுபட்டு அரசியலுக்கு வந்த திரை பிரமுகர் விஜய்காந்த். அவரை முதல்வாராக அமர்த்தக் கூட
தயாராக இருந்தது தமிழகம். ஆனாலும் அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
இன்றைக்கு இருக்கிற அரசியல் வெற்றிடத்தை பயன் படுத்தி
காலூன்ற நினைக்கும் ரஜினியின் முயற்சியைத் தமிழர்கள் மலர்தூவி வரவேற்பார்களா? ரஜினி தக்கவைத்துக் கொள்வாரா என்பதை காலம் தாம்
தீர்மானிக்க முடியும். தமிழக அரசியல் வெற்றிடத்தில் சீமான், அன்புமணி,
திருமுருகன் ஆகியவர்களும் உண்மையான விடிவெள்ளியாக சேர, சோழ, பாண்டியர் போல அமைய முடியும்
என்றாலும்- மோடிக்கு அளித்தது போல் ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க,
தமிழர் அடிப்படைகளை தூக்கிப் பிடிப்பது இந்திய நல்லாட்சிக்கே ஒரு தூண்டுகோலாக அமையுமேயன்றி
இந்திய ஒருமைப்பாட்டிற்கோ இந்திய இறையாண்மைக்கோ அணுவளவும் களங்கம் ஏற்படுத்திடாது என்கிற
மறுக்கமுடியாத உண்மையை வரலாற்று அடிப்படையில்
உணர்த்தி நிறுவ அவர்கள் களம் அமைத்தாக வேண்டும். சம தளத்தில் இருப்பவர்கள் யார் இந்த சீமான் என்று
கேள்வி எழுப்பாமல் நம்மவர் என்று தோள் கொடுக்க வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.