உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில், அதிவேகஒலியியல் ஏவுகணை சோதனையை முன்னெடுத்துள்ளது இரஷ்யா. இந்தப் புதிய ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என்று புதின் அறைகூவல் விடுத்து உள்ளார். 12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில், அதிவேகஒலியியல் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய முதல் நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியதாக இரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் ராணுவ உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முதன்மை ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட இரஷ்ய அதிபர் புதின், உலகில் எந்த நாடும் இந்த ஏவுகணையைத் தடுத்து நிறுத்தவோ, முறியடிக்கவோ முடியாது என பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிவேகஒலியியல் ஆயுதங்களில் நாங்கள் தனித்துவமான முன்னேற்றம் கண்டு உள்ளோம். எங்களைப் பிடிக்க மற்ற நாடுகள் முயற்சிக்கின்றன என்று புதின் கூறினார். சிர்கோன் என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிவேகஒலியியல் ஏவுகணையானது மாக் 9-ன் வேகத்தை மிஞ்சும் எனவும் மணிக்கு சுமார் 7,000 மைல்களை தாண்டும் எனவும் புதின் அறிவித்துள்ளார். அதிவேகஒலியியல் ஏவுகணையானது ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பாயும் எனவும் புதின் கூறினார். அதுமட்டுமின்றி, இலக்கை நெருங்க நெருங்க ஆயுதத்தின் போக்கு மற்றும் அதன் உயரத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவைப் போலவே, அமெரிக்காவும் சீனாவும் அதிவேகஒலியியல் திட்டங்களில் ஈடுபட்டு உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனா ஒரு அதிவேகஒலியியல் விமானத்தை பரிசோதித்ததாகக் கூறியது, அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படை ஒரு ஏவுகணையை உருவாக்க லாக்ஹீட் மார்டினுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,379.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.