Show all

தமிழர்களை நேரடியாகவே சீண்டிப் பார்க்கிறது பாஜக.. கீச்சகத்தில் கொந்தளிப்பு

தமிழர்களை நேரடியாகவே சீண்டிப் பார்க்கும் செயல்தான் நடுவண் அரசு பொங்கல் விடுமுறையை ரத்து செய்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.    முதலில் தமிழர்களின் வேளாண்மையை நடுவண் அரசு காவிரி நீரை பெற்றுத் தராமல் மறைமுகமாக சீரழித்தது. சல்லிக்கட்டு விவகாரத்திலும் அது நாடகமாடி வருகிறது. இப்போது பொங்கல் பெருவிழாவை விடுமுறைப் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பது தமிழர்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் அது பகிரங்கமாக சீண்டிப் பார்த்துள்ளதாகவே பொருள் என்று கீச்சகத்தில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். பொங்கல் பெருவிழாவைக் கட்டாய பொது விடுமுறைப் பட்டியலிலிருந்து நீக்கி விட்டது நடுவண் அரசு. இதனால் நடுவண் அரசு ஊழியர்கள் இதை முழுமையாக அனுபவிக்க முடியாது. பொங்கலைக் கொண்டாடவும் முடியாது.

விருப்ப விடுமுறையாக இதை மாற்றி, பொங்கல் விழாவிற்குரிய பெருமையை அவமதித்து விட்டது நடுவண் அரசு. ஒட்டுமொத்த தமிழர்களும் நடுவண் அரசின் இந்தச் செயலால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. பலரும் நடுவண் அரசை மிக மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.