Show all

எந்தப்படமும், உங்கள் செல்பேசியில் இருந்து களவாடப்படலாம்! படம் திருத்தும் எந்தச் செயலியும் உங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தே

பயனர்களின் மிடுக்குப்பேசியில் உள்ள புகைப்படங்களை கமுக்கமாகத் திருடும் 28 செயலிகள் கூகுள் விளையாட்டு அங்காடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதாவது உங்கள் செல்பேசியில் இருந்தால் உடனே அகற்றுங்கள்

19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு தனது விளையாட்டு அங்காடியிலிருந்து  1,000 க்கும் மேற்பட்ட செயலிகளை அகற்றி உள்ளது. அவற்றில் பல களவாணிச் செயலிகள் என்பதே காரணம்.

இந்தச் செயலிகளில் மிகவும் ஆபத்தான வகைகளில் ஒன்று தான் பயனர்களின் மிடுக்குப்பேசியில் உள்ள புகைப்படங்களை கமுக்கமாகத் திருடும் செயலிகள். இந்த வகையின் கீழ் மொத்தம் 28 செயலிகள் கூகுள் விளையாட்டு அங்காடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இவ்வகை செயலிகளை கூகுள் அதன் விளையாட்டு அங்காடியிலிருந்து நீக்கிவிட்டாலும் கூட, அதை தரவிறக்கம் செய்த பயனர்கள் இன்னமும் அவைகளை தங்களின் மிடுக்குப் பேசியில் வைத்தே உள்ளனர் பலர். எனவே இந்த 28 செயலிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உங்கள் மிடுக்குப் பேசியில் நிறுவியிருந்தால் அதை உடனே அகற்றுமாறு  பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

01. செல்பீ கேமரா ப்ரோ 02. ப்ரோ கேமரா பியூட்டி 03. பிரிஸ்மா போட்டோ எபெக்ட் 04. போட்டோ எடிட்டர் 05. போட்டோ ஆர்ட் எபெக்ட் 06. ஹாரிஸான் பியூட்டி கேமரா 07. கார்ட்டூன் போட்டோ பில்டர் 08. கார்ட்டூன் எபெக்ட 09. கார்ட்டூன் ஆர்ட் போட்டோஸ் 10. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ 11. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ பில்டர் 12. ஆஸம் கார்ட்டூன் ஆர்ட் 

வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் போலி விரைவுஏற்கை குறியீடு (க்யூஆர்) சொடுக்கினால் உங்கள் பணம் விரைவில் காணாமல் போகும்
13. ஆர்ட் ஃபிளிப் போட்டோ எடிட்டிங் 14. ஆர்ட் பில்டர் 15. ஆர்ட் பில்டர் போட்டோ 16. ஆர்ட் பில்டர் போட்டோ எபெக்ட்ஸ் 17. ஆர்ட் போட்டோ எடிட்டர் 18. ஆர்ட் எபெக்ட்ஸ் ஃபார் போட்டோ 19. ஆர்ட் எடிட்டர் 20. வால்பேப்பர்ஸ் எச்டி 21. சூப்பர் கேமரா 22. பிக்ஸ்சர் 23. மேஜிக் ஆர்ட் பில்டர் போட்டோ எடிட்டர் 24. ஃபில் ஆர்ட் போட்டோ எடிட்டர் 25. எமோஜி கேமரா 26. பியூட்டி கேமரா 27. ஆர்டிஸ்டிக் எபெக்ட் பில்டர் 28. ஆர்ட் எபெக்ட் 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,386.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.