Show all

சட்டமன்ற விவகாரங்களில் நடுவண் புலனாய்வுத்துறை தலையிட முடியாது;: எடப்பாடி பதில் மனு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி நடுவண் புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி தன் பதில் மனுவில் கோரியுள்ளார்.

      இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க மு.க ஸ்டாலின் கோரினார். எனினும் பேரவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரத்தை நடுவண் புலனாய்வுத்துறை அல்லது வருவாய்துறையினரை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் அறங்;கூற்று மன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

      இந்த மனுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சட்டமன்றம் சார்ந்த விசயம் என்பதால் நடுவண் புலனாய்வுத்துறை வருவாய் துறையினர் விசாரிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் தாக்கல் செய்த மனு விசாரிக்க தகுந்தது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் முதல்வர் எடப்பாடி கோரியுள்ளார்.

      தம்பி ஸ்டாலின் பொறுமையா இருந்து சாதிக்கலாமே! ஏன் இத்தனை அவசரம் என்று பேசிக்கொள்கிறார்கள் மக்கள்.

      

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.