மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், யுவராஜ் சிங் மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு மொகமது ஷமி, தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். அடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் திவான் 5 ரன்களிலும் வீராட் கோலி 3 ரன்களிலும் மற்றும் தினேஷ் கர்திக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதிகபட்சமாக அஜிங்கியா ரகானே 91 பந்துகளில் 60 ரன்களையும் தோனி 54 ரன்களையும் குவித்தனர். எனினும் மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க தவறியதால் இந்திய அணி 49.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது 11 ரன்களில் தோல்வியை தழுவியது இந்திய அணி. இந்தியா 2-1 என்ற புள்ளிகளுடன் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகள் மோதும் தொடரின் இறுதி போட்டி ஜூலை 6-ந்தேதி நடைபெறுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.