திருச்சி மாணவர் சூரஜின், அடுத்த மாதம் ஆறுநாட்கள் கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார். 19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்து கொள்ளும், இந்திய அணி தேர்வுக்காக, அரியானாவில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான தடகள போட்டியில் திருச்சி சமது பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார். ஒன்றிய அளவிலான தடகள போட்டிகள் அரியானாவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் திருச்சி காஜாநகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவரும், தடகள வீரருமான ஏ.சூராஜ் 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார். மேலும் 20-வது ஒன்றிய பெடரஷன் கப் ஜூனியர்ஸ் போட்டியில் 20 அகவைக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான தடகள போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றார். சூரஜின், அடுத்த மாதம் ஆறுநாட்கள் கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார். மாணவன் சூரஜின் இந்த வெற்றியை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர், மற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், உடன் மாணவர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,298.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.