Show all

அனுதாபம் தேடும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்! சதுரங்க விளையாட்டு வீரர்களை பலிகடாவாக்கி

தங்கள் நாட்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலக்கிக் கொள்ளும் அரசியல் விளையாட்டை முன்னெடுத்துள்ளனர் வீணாய் போய்க் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.

14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பத்து பேர்கள் கொண்ட பாகிஸ்தான் சதுரங்க விளையாட்டுக் குழு சென்னையில் நடைபெறும் சதுரங்க போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ளது. இந்நிலையில் திடீரென சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது.

188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான சதுரங்க வீரர்கள் பங்குபெறும், நாற்பத்தி நான்காவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சென்னையில் சீரும் சிறப்புமாகத் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் பாகிஸ்தான் அனுப்பிய பத்து சதுரங்க வீரர்களில், ஐந்து பேர் கொண்ட பெண்கள் அணியில் மெஹெக் குல், அலீனா ஜாஹித், சனோபியா வாசிப், நூர் பாத்திமா மற்றும் சஹ்ரிஷ் ஆகியோர் இருந்தனர். ஆண்கள் அணியில் அமீர் கரீம், ஜுனைத் சோஹைல், முஹம்மது வக்கார், முஹம்மது ஷாசெப் மற்றும் எஹ்ட்ஷாம் இருந்தனர். 

இந்த 10 பேர் கொண்ட குழு சென்னையில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் பங்கேற்க சென்னை வந்தனர். இந்நிலையில் திடீரென சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானைச் சேந்த 10 சதுரங்க வீரர்கள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளனர்.

ஒன்பது நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் தலைநகரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், தங்களுடைய பகுதி என பாகிஸ்தான் சர்ச்சையில் ஈடுபட்டு வரும், சிறீநகர் பகுதி வழியாக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் தீபந்த ஓட்டத்தை இந்தியா நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது.

இதைக் காரணமாக்கி, நேற்றைக்கு கடைசி நேரத்தில், தங்கள் நாட்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலக்கிக் கொள்ளும் அரசியல் விளையாட்டை முன்னெடுத்துள்ளனர் வீணாய் போய்க் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்- பன்னாட்டு அங்கீகாரம் மிக்க இந்த விளையாட்டுடன் அரசியலைக் கலக்கும் இந்தியாவின் செயலை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கத்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் வழியாக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் தீபந்த ஓட்டத்தை இந்தியா நடத்தியுள்ளது என்கின்றனர். 
ஒன்பது நாட்களுக்குப் பிறகு- பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன்- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற முழக்கத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் சொந்தமான தமிழ்மண்ணில்- தமிழ்நாடு அரசால், சீரும் சிறப்புமாக ஒப்பனை செய்யப்பட்டிருக்கும் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்திருந்த வேளையில்- இந்த அரசியல் சித்து விளையாட்டை ஆடியிருக்கின்றனர் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.

பாகிஸ்தானின் இந்த செயல் குறித்து இந்தியா, மதிப்புமிக்க பன்னாட்டு நிகழ்வை இஸ்லாமாபாத் அரசியலாக்கியது மிகவும் வருத்தப்பாட்டிற்கு உரியது என்று விமர்சித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,325.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.