Show all

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கோப்பையை வென்றது இந்தியா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி  ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 51 ரன்களும் கெய்ல் ஹோப் 46 ரன்களும் விளாசினார்.  அபாரமாக பந்து வீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

206 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 36.5 ஓவரிலே இந்த இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக  விராட் கோஹ்லி 111 ரன்களும், தினேஷ் கார்த்திக் 50 ரன்களும் மற்றும் ரஹானே 39 ரன்களும் குவித்தனர். விராட் கோஹ்லி மற்றும் தினேஷ் கார்த்திக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா அணி. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.