சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்து. புவனேஸ்வர் குமார், பும்ப்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தவான் 83 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 78 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது. அடுத்து யுவராஜ் சிங் களம் இறங்கினார். இந்தியா 38 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 101 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தும், யுவராஜ் சிங் 25 பந்தில் 23 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். வெற்றியை அடுத்து இம்மாதம் 15ம் தேதி அரையிறுதி போட்டியில் வங்க தேச அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.