Show all

மகளிர் உலக கோப்பை: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தனது நான்காவது ஆட்டத்தில் இலங்கையை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இங்கிலாந்தின் டெர்பி நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி  50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் தீப்தி சர்மா 78 ரன்களும் கேப்டன் மிதாலி ராஜ் 53 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சிறிபள்ளி வீரக்கொடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

அடுத்து 233 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி  தரப்பில் ஜுலன் கோஸ்வாமி, பூனம் ராவத் தலா 2 விக்கெட்டுகளும், எக்தா பீஷித், தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தீப்தி சர்மா ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.