சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிரோஷன் திக்வெல்லா 73 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் சார்பில் ஜுனைத் கான், ஹாசன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 237 ரன்களை இலக்காகக் கொண்டு களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஸார் அலி - பஃகார் சமான் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்திருந்த போது பஃகார் 50 (36) எடுத்து ஆட்டமிழந்தார். அஸார் அலி 34 (50) ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் வேகம் குறையத் தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சர்பராஸ் அகமது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்பராஸ் 61 (79) ரன்களும் அமீர் 28 (43) ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 44.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி இலங்கையை வெளியேற்றி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.