சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இதன் மூலம் நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மொத உள்ளது இந்தியா. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேதார் ஜாதவ் (6 ஓவர், 22 ரன்), பும்ரா, புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். அஷ்வின் 10 ஓவர் வீசி 54 ரன் கொடுத்தும் விக்கெட் எடுக்கவில்லை. பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.இந்த ஜோடி 87 ரன் சேர்த்த நிலையில் தவான் (46 ரன், 34 பந்து) மோர்டசா வேகத்தில் வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியிடம், யாருடைய பந்துவீச்சும் எடுபடாததால் வங்கதேச பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். இறுதியாக இந்த ஜோடி 40.1 ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து வென்று பைனலுக்கு முன்னேறியது. ரோகித் 123 ரன் (129 பந்து), கோஹ்லி 96 ரன் (78 பந்து) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வரும் 18ம் தேதி லண்டனில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இத்தொடரின் நடப்பு சாம்பியனான இந்தியா 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் முதல் முறையாக பைனலில் விளையாடுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.