ஏடாகூடம் என்பது அழகான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லில் மூளைக்கு வலிமை ஏற்றும் ஒரு புதிர் விளையாட்டுக் கருவியைக் கொண்டிருந்தனர் தமிழ்முன்னோர். இது தமிழ்நாட்டில் பலருக்கு தெரியாதிருக்கிறது. ஏடாகூடம் கருவி குறித்து விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை. 06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. தமிழ்நாட்டில் பலருக்கு தெரியாதிருக்கிற, இந்த ஏடாகூடம் கருவி கேரளா முழுக்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போற்றிக் கொண்டாடும் விளையாட்டுக் கருவியாக இருக்கிறது இந்த ஏடாகூடம். பற்பல வடிவமைப்புகளில் பேரளவாக இந்த விளையாட்டுக் கருவி கேரளாவில் முன்னெடுக்கப்பட்டு வணிகமாற்றப்படுகிறது. அமேசானிலும் கூட இந்த ஏடாகூடம் பல விலைகளில் கிடைக்கிறது என்று அறிகிற போது பல்வேறு எண்ணிக்கையில் கட்டைகள் கொண்ட பல வகையான வடிவத்தில் ஏடாகூடங்கள் உண்டு. மரக் கட்டைகளால் ஆன ஒரு தொகுப்பை பகுப்பாய்வு மற்றும் கணிதத் திறன்களைப் பயன்படுத்தினால் மட்டுமே ஒழுங்கான உரிய உருவத்தை உருவாக்கிக் கொண்டு வரமுடியும். இது அமேசானில் பல வடிவங்களில் பல விலைகளில் கிடைக்கிறது. ரூபாய் 349விலையுள்ள ஒரு எளிய ஏடாகூடத்தை இந்த இணைப்பில் சென்று வாங்கலாம். ஒவ்வொரு கட்டைகளையும் அதன் உரிய வெட்டு களில் வைத்து ஒன்று சேர்ப்பது மிகவும் கடினமானது. அதுபோல சேர்த்தவற்றை பிரிப்பதும் மிகவும் கடினம். அதன் வடிவங்கள் நம்மைக் குழப்பும் வகையில் இருப்பதால், அதற்குரிய ஆப்பை கண்டுபிடித்தால் பிரிப்பது எளிது. எனவே தான் ஏடாகூடம் என பெயர் பெற்றது. இன்றைக்கும் கேரளாவில் மக்கள் இதனைப் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். ஊரா குருக்கு (அவிழ்க்க முடியாத முடிச்சு) எனவும் இதற்குப் பெயர் உண்டு. வலையொளியில் (யூடியுப்) மலையாள மொழியில் ஏடாகூடக் கருவிக்கு ஏராளமான காணொளிகள் கிடைக்கின்றன. ஏடாகூடத்தைக் கொண்டாடி, காலங்கடந்து நிலைநிறுத்திவரும் மலையாள உடன்பிறப்புகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
என்கிற திருக்குறள்தான் நம்நினைவுக்கு வருகிறது
இக்கால ரூபிக்ஸ் கியூப் போல கைக்குள் அடங்கும் அளவுகளில் - மரக்கட்டைகளால் செய்யப் பட்ட ஒரு விளையாட்டுக் கருவியே ஏடாகூடம். மூளைக்கு வேலை கொடுத்து வலிமையாக்கும் ஒரு எளிய மற்றும் நுட்பமான விளையாட்டுக் கருவி இது. (ஆங்கிலத்தில் இதனை Burr puzzle என்று சொல்வர்) .
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,651.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.