Show all

சரக்குமற்றும் சேவை வரியில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்கப்படும்

மோடி அரசு புதியதாக கொண்டுவந்துள்ள, மாநிலங்கள் உடைமையைத் தட்டிப் பறிக்கும், தங்கள் உடைமைகள் பறிபோவதை எந்த மாநிலமும்; உணராத, சரக்குமற்றும் சேவை வரியில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்கப்படும் என நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

     நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் என்ற தலைப்பில்- முழுஅதிகாரத்தையும்; நடுவண்; அரசுக்கு கீழ் கொண்டு வரும் சரக்குமற்றும் சேவை வரி சூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் 15-வது சரக்குமற்றும் சேவை வரி கூட்டம் நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல பலிஆடுகள் கலந்து கொண்டன.

     அப்போது பேசிய அருண் ஜேட்லி, சரக்குமற்றும் சேவை வரியில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு 0.25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று கூறினார்.

     மேலும், 500 ரூபாய்க்கு குறைவாக வாங்கும் செருப்புகளுக்கு 5 விழுக்காடு 500 ரூபாய்க்கு மேல் வாங்கும் செருப்புகளுக்கு 18 விழுக்காடு; வரையிலும் வரி விதிக்கப்படுகிறது. பிஸ்கட்டுக்கு 18 விழுக்காடு, பருத்தி, நூல் ஆடைக்கு 12 விழுக்காடு, பீடிகளுக்கு 28 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றார் அருண் ஜேட்லி. தற்போது தங்கத்திற்கு இறக்குமதி வரி 10 விழுக்காடு, 1 விழுக்காடு வாட் வரி, 1 விழுக்காடு கலால் வரி விதிக்கப்படுகிறது. தங்கம் மீதான சரக்குமற்றும் சேவை வரி 2 விழுக்காடு விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 விழுக்காடு விதிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.