ஊடகங்கள் நடத்தும் பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஓர்அண்டில்- விடுமுறை நாளிலும் உச்சஅறங்கூற்றுமன்றம் கூடவேண்டிய தேவை ஏற்பட்ட மூன்று வழக்குகள்! என்னென்ன தெரியுமா? இந்த ஆண்டில் இதுவரை மூன்றுமுறை அத்திபூத்தது. உச்சஅறங்கூற்றுமன்றம மூன்று முறை விடுமுறை நாளில் சிறப்பு விசாரணை மேற்கொண்டுள்ளது. முதல் நிகழ்வு கடந்த 07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (20.04.2019) நடந்தது. அப்போது உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தலைமை அறங்கூற்றுவராக இருந்த ரஞ்சன் கோகாய் மீது அறங்கூற்றுமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றஞ்சாட்டை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணையை அலுவலக விடுமுறை நாளான சனிக்கிழமையன்று உச்ச அறங்கூற்றுமன்ற அமர்வை நடத்தியது. அடுத்து, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலம், யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கின் தீர்ப்பை உச்ச அறங்கூற்றுமன்றம் விடுமுறை நாளான 23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 சனிக்கிழமையன்று (09.11.2019) அறிவித்தது. இந்நிலையில் 3வது முறையாக உச்ச அறங்கூற்றுமன்றம் விடுமுறை நாளான முந்தாநாள் சிறப்பு வழக்கு விசாரணையை நடத்தியது. மகாராஷ்டிராவில் தீடீரென்று நள்ளிரவில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரம் தொடர்பாக- சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக பதிகை செய்த மனு மீது உச்ச அறங்கூற்றுமன்றம் முந்தாநாள் விசாரணை நடத்தியது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,347.
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மிகவும் முதன்மைத்துவம் மற்றும் அவசரம் சார்ந்த வழக்குகளை உச்ச அறங்கூற்றுமன்றம் எந்தநாளிலும் விசாரிக்கும். ஆனால் அது போன்ற நிகழ்வுகள் நிகழ்வது அத்திபூத்தாற் போன்றதாகவே இருக்கும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.