விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு: திமுக-காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம். விடுதலைப் புலிகள் அழிப்பில் காங்கிரசோடு சேர்ந்து திமுக செய்த வரலாற்றுப்பிழையில், அந்த வரலாற்றுப்பிழை மறைப்பிற்கு, திமுகவிற்கு சாட்சியாக, இலங்கை சென்று வந்ததை திமுகவோடு சேர்ந்து செய்துவிட்ட தவறாக நொந்து கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளை மீண்டும் ஓர் அறநெருக்கடியில் சிக்கவைக்கும் தவறாகக் பார்க்கிறது மீண்டும் காங்கிரஸ்- திமுக விடுதலைப் புலிகளை வைத்து குளிர்காயும் முயற்சியை. 07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் அண்மையில் துணிச்சலான ஓர் அறிக்கை விடுத்திருந்தார். “தமிழ்தொடர்ஆண்டு-5111ல் (ஆங்கிலம்-2009) போர் முடிந்ததும், திமுகவின் பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து, ராஜபக்சேவுடன் சிநேகமாக பழகினர். அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது. என்று சிங்களப்பேரினவாதிகள் - காங்கிரஸ் இந்திய அரசு - திமுக இணைந்த களவாணித்தனத்தில் சாட்சியாக இணைத்துக் கொள்ளப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தற்போது அந்தக் களவாணித்தனத்திற்கு துரோகியாக மாறிவிட்டதாக இவ்வாறு வருத்தப் பதிவிடுகிறார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல். மீண்டும் காங்கிரஸ்- திமுக: விடுதலைப்புலிகளைப் பகடைகாயாக்கி குளிர்காயும் வேலையை தொடங்கியிருக்கின்றன. விடுதலை புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனைபடை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, விடுதலை புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டினார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘இந்த பேச்சு இனத்துரோகம்’ என்று விமர்சித்தார். இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும், திமுக, காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு தனது கீச்சுப் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- விடுதலைப்புலிகள் தேசத்தின் பாதுகாவலர்கள். சிங்கள, பவுத்த பயங்கரவாதத்துக்கு எதிராக தம்மக்களை காப்பாற்றிய மக்கள் இயக்கமே விடுதலைப்புலிகள். அப்படிப்பட்ட புலிகளை அழித்துவிட்டதாக அறிவித்த பிறகும் விடுதலை புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருமாவளவன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். கூட்டணியில் இருந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் இவ்வாறு செயல்பட்டது திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது விடுதலைப் புலிகள் விவகாரத்திலும் திமுகவின் களவாணித்தனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பது, திமுகவிற்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால், தமிழ்ஆர்வலர்கள்: சிங்களப்பேரினவாதிகள்- காங்கிரஸ் இந்திய அரசு- திமுக இணைந்த களவாணித்தனத்தில் சாட்சியாக போன தவறுக்கு வருந்தி, கைமாறு செய்யும் நிகழ்வாக விடுதலைசிறுத்தைகளின் இந்த முயற்சியைப் பாராட்டுகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,345.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.