தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது, ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு இந்திய அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என கடந்த மாத இறுதியில் உத்தரவிட்டது. 29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வோடபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி தங்களது வருவாயில் ஒரு பகுதியை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும். அந்தத் தொகையைக் குறைத்துக் கொடுப்பதற்காக வருவாயைக் குறைத்து காட்டியதாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது, ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு இந்திய அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என கடந்த மாத இறுதியில் உத்தரவிட்டது. இதனால் வோடபோன், ஐடியா கடும் நட்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நட்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் 20விழுக்காடு அளவிற்கு அந்த நிறுவனம் இழப்பை சந்தித்துள்ளது. முதன்மை தொகை, வட்டி, அபராதத் தொகை, அபராதம் மீதான வட்டி என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்ட தொகையை கட்டுவதற்கு 3 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது வோடாபோன் நிறுவனத்திற்கு. இந்திய அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் எனவும் இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான எதிர்காலம் மிகவும் மோசமாக உள்ளது எனவும் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சஅறங்கூற்றுமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இதில் உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக வோடபோன், ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,337.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.