நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்வதற்கு நூறு விழுக்காடும் தகுதி உள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் திறனாய்வுக்கு எதிர்வனையாற்றியுள்ளார் பாஜகவின் வானதி சீனிவாசன். 21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆறாண்டு காலம் கடுமையான போராட்டம், மன உளைச்சல், தான் சார்ந்த கட்சிக்கு பேரளவான பின்னடைவு என்று அலைக்கற்றை ஏலத்தில் மிகுந்த அனுபவம் கொண்டவர் ஆ. ராசா. அவருக்கு நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்வதற்கு நூறு விழுக்காடும் தகுதி உள்ளது. ஆனால், அவர் தன்மீதான வழக்கில் முழுமையாக விடுதலை பெற்ற காரணம் பற்றி, நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்வதில் மென்மைபோக்கையும் முன்னெடுக்கலாம் என்பதே விடையம். நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலம் தொடர்பாக ஆ. ராசா விமர்சித்து இருந்த நிலையில், பாஜகவின் மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் ஆ.ராசாவின் திறனாய்வுக்கு எதிராக வெகுண்டுள்ளது, குற்றம் நடந்திருக்குமோ என்ற ஐயத்தை கிளப்புவதாக உள்ளது என்ற கருத்து பேசுபொருளாகியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலம் கடந்த கிழமைதான் நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் போனது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடந்ததாகச் சொன்னவர்கள், ஏன் இது தொடர்பாகப் பேசுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்தனர். இது தொடர்பாக திறனாய்வு செய்யவும், குற்றச்சாட்டே வைக்கவும் நூறுவிழுக்காடு தகுதியுள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் திறனாய்வு செய்து இருந்தார். இதனிடையே இந்தக் குற்றச்சாட்டிற்கு பாஜக மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலம் குறித்துப் பேச திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்குத் தகுதி இல்லை என்று பேசியிருப்பது- அவரை இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கில் இருந்து விடுவித்த அறங்கூற்றுமன்றத்தை அவமதிக்கும் வகையினது என்று அறியாமல் பேசியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு எவ்வித ஊழல் குற்றச்சாட்டிற்கும் ஆளாகவில்லை நற்சான்றிதழ் கொடுத்துக்கொண்டு, திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு உள்ளதாக அவதூறு தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டில் வரவுள்ள மக்களவை தேர்தலில் தற்போது உள்ள இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வென்று பாஜக உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். மக்களவை தேர்தலுக்குத் தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி இருக்கும் என இப்போது சொல்ல முடியாது. இதையெல்லாம் மேலமட்டக் குழு தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார். பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்து பாஜக தங்களின் சுயநலத்திற்காக நடைமுறையாக்கத் துறை சோதனை நடத்தி வருவதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ள நிலையில், இது தொடர்பாகக் கேள்விக்குப் பதில் அளித்த அவர், 'எல்லா வகையான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வருவதே காங்கிரஸ் கட்சி தான். எனவே, அவர்களுக்கு இதைச் சொல்ல அருகதை இல்லை' என்று காட்டமாக விமர்சித்தார்.
கனல் கண்ணன் திருவரங்கம் கோவில் அருகே உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்காக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூட ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்தப் பாட்டில் உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, 'அதை இப்போது கூற வேண்டிய கட்டாயம் இல்லை. சாமி நிந்தனை செய்பவர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகவே எங்கள் நிலைப்பாடு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,331.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.