வயிற்று வலி என்று சென்றவருக்கு உள்நோக்கு படக்கருவியின் மூலம் படமெடுத்துப் பார்த்ததில், அவரின் சிறுநீரகத்தின் எடை 7400 கிராம்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனே அகற்றப்பட்டது. 11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயல்பாக சிறுநீரகத்தின் எடை 120முதல் 150கிராம் எடைதான் இருக்கும். ஆனால், டெல்லியில் வயிற்றுவலி என்று சென்ற நோயாளிக்கு உள்நோக்கு படக்கருவியின் மூலம் சோதித்தில் அவருக்கு 7400 கிராம் எடையில் சிறுநீரகம் வீங்கியிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை அகற்றியுள்ளனர். இது கின்னஸ் சாதனையாகவும் கருதப்படுகிறது. இதுவரை 4000கிராம் சிறுநீரக வீக்கமுள்ள சிறுநீரக அகற்றல்;தான் சாதனையாக இருந்தது. மனிதன் உயிர்வாழ்வதற்கு ஒருபக்க சிறுநீரகமாவது தேவை என்ற நிலையில் அந்த மருத்துவர்கள் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து விட்டார்களாம். நோயாளி நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். இணைய ஆர்வலர்கள் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,349.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.