'பொருளாதாரத்தைப் போலவே அனைத்துத் துறைகளிலும் தவறான தகவலை நிதியமைச்சர் கூறுகிறார். டெட்டால் வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே,' என்று நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் ஒரு இணைய இலக்கியர். அது குறித்த விரிவை இந்தக் கட்டுரை பேசும். 29,தை,தமிழ்த்தொடராண்டு-5124: 'ஊழல் பற்றி பேசுவதற்கு முன்பாக உங்கள் வாயை டெட்டால் ஊற்றி நன்றாகக் கழுவுங்கள்' என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிரடி காட்டி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இணைய இலக்கியர்கள் அசத்தி வருகின்றனர். ஊழல் பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் வாயை டெட்டால் ஊற்றி நன்றாக கழுவுங்கள், என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசியிருந்தார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில், 'டெட்டால் ஊற்றி வாயை கழுவுங்கள்' என்று பேசும் காட்சியை இணைய இலக்கியர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதால் இந்தக் காணொளி தீயாகி இருக்கிறது. நிர்மலா சீதாராமனின் இந்தக் காணொளிபை; பகிர்ந்து சிலர் எதிர்மறை திறனாய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். கீச்சுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம், 'டெட்டால் ஒரு தொற்றுக்கொல்லி, அது பூஞ்சைகளைக் (பாக்டீரியா) கொல்லும். ஆனால் குறுவிகளை (வைரஸ்) எதுவும் செய்யாது. அதனால்தான் உங்களுக்கும், உங்கள் உடன் நண்பர்களுக்கும் அதை என்னால் பரிந்துரைக்க முடியாது,' எனப் பதிவிட்டுள்ளார். கீச்சுவில் நிர்மலா சீதாராமன் பேச்சு குறித்துப் பதிவிட்டுள்ள ஒரு இணைய இலக்கியர். 'டெட்டாலை வாயில் ஊற்றக்கூடாது. வாயை தூய்மையாக்க ப்ளோரைடு இருக்கும் வாய்கொப்பளிப்புகளையே பயன்படுத்த வேண்டும். அதனால் டெட்டாலை பரிந்துரைக்கூடாது' என்று பதிவிட்டுள்ளார். 'டெட்டால் எதற்கு? கோல்கேட் பிளக்ஸ், லிஸ்டரின் பற்றி அவருக்குத் தெரியாதா?' என்று கேட்டு பதிவிட்டுள்ளார் ஒரு இணைய இலக்கியர். 'பொருளாதாரத்தைப் போலவே அனைத்துத் துறைகளிலும் தவறான தகவலை நிதியமைச்சர் கூறுகிறார். டெட்டால் வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே' என்று ஒரு இணைய இலக்கியர் பதிவிட்டதைத்தான் இருப்பதிலேயே உச்ச இணைய இலக்கியம் ஆகும். 'டெட்டாலின் நிறத்தைப் பார்த்த பிறகு அது பாஜகவுக்கு மட்டுமே உகந்தது எனத் தெரிகிறது,' என்று டெட்டால் சோப்பின் படத்தைப் பகிர்ந்து ஒரு இணைய இலக்கியர் பதிவிட்டுள்ளார். 'ஆண் சிங்கத்தை பார்த்து இருப்போம், இப்போது பெண் சிங்கத்தின் கர்ச்சனையைப் பாருங்கள்' என்று மோடி, நிர்மலா சீதாராமன் பேசிய காணொளிகளைப் பகிர்ந்து ஒரு இணைய இலக்கியர் பதிவிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன் டெட்டால் பேச்சு காணொளி தீயானதில், டெட்டால் நிறுவனத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்து இருப்பதாகவும் சில இணைய இலக்கியர் பதிவிட்டுள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,522.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.