ஆதார் எண்ணை அதில் இணை. ஆதார் எண்ணை இதில் இணை. என்பதை நிறைவு செய்வதற்கு எல்லாம், பொதுமக்கள் இணைய மையங்களைத்தான் நம்பியிருக்கின்றனர். இந்த நிலையில், ஆதார், வருமான எண் கையாளுகையில் தவறு நேர்ந்தால் ரூ.10000 அபராதமாம். தவறை திருத்தி ரூ.10000த்தை மீட்பதற்கான வழிவகை ஏதும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணையோ, ஆதார் எண்ணையோ தவறாகத் தெரிவிக்கும் பட்சத்தில், 10,000 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் என்று புதிய விதி தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை மேற்கோள் காட்டும்போது கவனமாக இருக்க வேண்டுமாம். மாற்றிக் கொடுத்துவிட்டால் தவறான எண் என்பதாக எடுத்துக் கொண்டு உங்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமாம். ஆக மக்கள் எங்கு எப்போது ஆதார் எண்ணையோ வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணையோ கொடுக்கும் போது, சரிபார்த்து மிக கவனமாக கொடுக்க வேண்டுமாம். இந்தியாவை மாற்றுவதற்கான இந்திய ஆணைத்தின் மூலம், நடப்பாண்டில் வைக்கப்பட்ட சட்டமுன்வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ள படி, வருமான வரி சட்டம் 1961ன் கீழ், அண்மைய திருத்தங்கள் படி, வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணுக்கு பதில் ஆதார் எண் சில சந்தர்ப்பங்களில் பொருந்தும் என்றாலும், சில இடங்களில் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருமான வரி பதிகை, வங்கி கணக்கை திறக்க, பங்குச்சந்தை கணக்கு திறக்க, மேலும் 50,000 ரூபாய்க்கு மேற்கொண்ட மதிப்பு கொண்ட நிதி பத்திரங்கள், போன்ற இடங்களில் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணும் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 272பி இன் கீழ், யாராவது வருமான வரித்துறையின் கீழ், தவறான வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணைக் கொடுத்ததாகக் கண்டறியப்பட்டால், ரூ.10,000 அபராதம் வரை அபராதம் விதிக்கக் கூடும். இந்த நிலையில் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணுக்கு பதிலாக கொடுக்கப்படும் ஆதார் எண் தவறாக இருக்கும் பட்சத்தில் அதற்கும் அபராதம் விதிக்கப்படலாம். முன்னதாக வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணுக்கு மட்டுமே அபராதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வருமான வரித்துறை நிரந்தர கணக்கு – ஆதார் பரிமாற்றம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அபராதம் ஆதார் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் என்பதற்கு பதிலாக தவறான ஆதார் எண்ணைக் கொடுக்கிறீர்கள். அல்லது குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் உங்கள் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் அல்லது ஆதார் வழங்கத் தவறி விட்டீர்கள். அவ்வாறு இந்த அடையாளத்தை கொடுக்க தவறினால் இந்த அபராதமும் விதிக்கப்படும். இதனால் இனி மக்கள் உங்கள் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணையோ அல்லது ஆதார் எண்ணையோ கொடுக்கும் போது, மிகக் கவனமாக கொடுக்க வேண்டும். “நான் என்ன செய்கிறேன். எல்லாம் அந்த இணைய மைத்துக்காரர் தானே செய்யப் போகிறார். இதில் நான் எங்கே எப்படி கவனமாக இருக்கமுடியும்” என்று பயங்கரமாக குழம்புகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம் என்னென்ன நடக்கிறது என்று. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,335.
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொதுமக்கள் வருமான வரி செலுத்தும் நடவடிக்;கைக்கு- வருமான வரித்துறை இப்போது நிரந்தர கணக்கு எண்ணுக்கு (பான்) பதிலாக, 12 இலக்க பயோமெட்ரிக் எண்ணை அனுமதித்துள்ளது. அதே 12 இலக்க எண் உள்ள ஆதாரையும் மேற்கோள் காட்ட வழிவகை இருக்கிறது.
மக்கள் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் தவறான ஆதார் எண்ணைக் கொடுத்தால், அதற்காக அபராதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.