Show all

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார்? ஜெர்மனி செல்லும் முன் மோடி நடத்திய கருத்தாய்வு

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கருத்தாய்வு நடத்தியுள்ளனர்.

     குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசு தலைவருக்;கான வேட்பாளர் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

     பாஜகவும், காங்கிரஸும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரே குடியரசு தலைவர் மாளிகையை அலங்கரிக்க வேண்டும் என்பதில் போட்டி போட்டு வருகின்றனர். இரு தரப்பினரும் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் அனைத்து கட்சியாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.

     குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில் குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்து டெல்லியில் பாஜக தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் கருத்தாய்வு நடத்தினர். அப்போது பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பெயரே அடிப்பட்டது.

75 அகவைக்கு மேற்பட்டவர்கள் அமைச்சர், முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளில் நீடிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி சட்டம் கொண்டு வந்தார். இதையேற்று குஜராத் முதல்வராக இருந்த ஆனந்தி பென், சிறுபான்மைத் துறை அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் தங்கள் பதவிகளை விட்டு  விலகினர்.

     எனவே மோடியைப்; பொருத்தமட்டில் இந்த அகவை வரம்பை குடியரசு தலைவர் தேர்தலிலும் புகுத்த முடிவு செய்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் தேர்வு முரளி மனோகர் ஜோஷியாக உள்ளார். அத்வானியின் பெயரும் அடிப்பட்டாலும் வயது வரம்பை பின்பற்றும்போது அத்வானியை விட ஜோஷி இளையவர் என்பதால் மோடியின் தேர்வும் ஜோஷியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

     பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. லக்னோ நீதிமன்றத்தால் அவர்கள் இருவரும் தண்டனை பெறவில்லை என்றாலும் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டவர்கள் குடியரசு தலைவர் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற சட்டம் இல்லாத போதிலும் பெரும்பாலான பாஜகவினரின் விருப்பம் அத்வானியோ அல்லது ஜோஷியோ இல்லை.

     அப்படி இருக்கையில் பிரதமர் ஜெர்மனி செல்வதற்கு முன்னர் அவரிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில் குடியரசு தலைவர் வேட்பாளராக ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு ஆகும். இந்த கருத்தையே பிரதமருக்கு நெருக்கமானவர்களும் விரும்புகின்றனர். மேலும் மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள தருண் சந்த் கெலாட்டின் பெயரும் அடிப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.