Show all

எப்போது தெரியுமா! சுங்கச்சாவடிகளில் உங்கள் விரைவுக்கட்டு அட்டை கணக்கிலிருந்து பணமும் எடுக்கப்படாமல், நீங்களும் பணம் செலுத்தாமல் கடக்கமுடியும்

ஒரு வேளை சுங்கச்சாவடிகளில் இதற்கான வருடிக்கருவி சரியாக வேலை பார்க்காவிட்டால், அதற்கு பதில் நம்மிடம் பணம் வசூலிக்கப்படுமா, அவ்வாறு வசூலிக்கப்படுவது, இருமடங்காக இருக்குமா என்பது நமக்கு ஒரு ஐயம் எழும் அல்லவா? அதற்கான விடை என்ன தெரியுமா?

24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த கிழமையிலிருந்து சுங்கச்சாவடியைக் கடக்க விரைவுக்கட்டு அட்டை வண்டியில் ஒட்டியிருப்பது கட்டாயம் என்று இந்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்தக் காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு அடுத்த கிழமை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 

இந்த காலக்கெடுவை, பயன்படுத்திக்கொண்டு பெரும்பாலான வாகனங்களில் விரைவுக்கட்டு அட்டை பொருத்தப்பட்டுள்ளது. ஒருவேளை விரைவுக்கட்டு அட்டை ஒட்டாமல் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து சென்றால், அந்த வழி தடத்திற்கான வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டி வரும். 

ஒரு வேளை சுங்கச்சாவடிகளில் இதற்கான வருடிக்கருவி சரியாக வேலை பார்க்காவிட்டால், அதற்கு பதில் நம்மிடம் பணம் வசூலிக்கப்படுமா, அவ்வாறு வசூலிக்கப்படுவது, இருமடங்காக இருக்குமா என்பது நமக்கு ஒரு ஐயம் எழும் அல்லவா? 

இதுதொடர்பாக இந்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திட்டவட்டமாக ஒரு விளக்கமளித்துள்ளது. “ஒரு வாகனத்தில் செயல்படும் வகையிலான விரைவுக்கட்டு அட்டை ஒட்டப்பட்டு, அந்த கணக்கில் போதிய அளவுக்கு பணம் இருப்பு இருந்தும்கூட சுங்கச்சாவடிகளில் உள்ள வருடிக்கருவி பழுது காரணமாக கட்டணத்தை வசூலிக்க முடியாமல் போனால், அந்த வாகன ஓட்டி இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படுவார். கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதற்காக ஒரு பற்றுத்தளையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வரையறுக்கப்பட்டுள்ளது

சுங்கச்சாவடிகளில் எந்திர கோளாறு காரணமாக விரைவுக்கட்டு அட்டை கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாவிட்டால், உங்கள் கையிலிருந்து பணத்தை கொடுக்க தேவை இல்லை. நீங்கள் அந்த சுங்கச்சாவடியை இலவசமாக கடந்து செல்லலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,391.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.