அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் வடஇந்தியர்களின் பேரளவான குடியேற்றமும், பல்வகையான அத்துமீறல்களும், தமிழ்மக்களின் வாழ்வாதாரத்திற்ம் தனித்துவம் பேணலுக்குமான சிக்கலாகப் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. அந்தநிலையில் தமிழ்நாட்டில் வடஇந்தியர் சிக்கல்களுக்கு தீர்வு என்ன? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 18,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: யாரையும் குடும்ப அடிப்படையில் அடையாளம் காணுவது தமிழ்மரபு ஆகும். தனியாள் குற்றம் செய்தால் குடும்பமாக பாதிக்கும் என்கிற சமூக அச்சத்தைத் தருவதற்கும், சமூகப் பாதுகாப்பிற்கும் ஆன நடைமுறையாகும் இந்த மரபு. தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்திலும் புதியதாக ஒரு ஆள் ஊருக்குள் வருவதை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள் உள்ளூர் மக்கள். தமிழ்நாட்டினரின் இருப்பிட அடையாளம் இப்படித்தான் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழ்நாட்டின் குடும்ப அட்டை, தமிழ்மரபு அடிப்படையில் பேணப்பட்டு வந்தது. அது தமிழ்நாட்டு மக்களுக்கான அடையாளமாகவும், இருப்பிடச் சான்றிதழாகவும் விளங்கியது. ஆனால் தற்போது குடுப்ப அட்டையை ஆதாருடன் இணைப்பது, மற்றும் ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை என்று இருப்பிட அடையாளமாக இருந்த குடும்ப அடையாள அட்டை பொது அடையாளமாக மாற்றப்பட்டிருப்பதே வட இந்தியத் தொழிலாளிகள் தமிழ் நாட்டில் அத்துமீறி அடாவடிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியாகப் போய்விட்டது. குடும்ப அட்டையைத் தமிழ்நாட்டிற்கான உள்ளூர் இருப்பிடச் சான்றிதழாக தொடர்ந்து அடையாளப்படுத்தினாலே அனைத்துச் சிக்கலும் தீரும். வட இந்தியத் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் குடும்பமாக அங்கீகாரம் பெறுவதை வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இதுவரை மறுக்காமல்தான் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது. குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களைக் கூட்டமாக எங்கு வேண்டுமானலும் மிகக் குறைந்த வசதிப்பாட்டில் தங்க வைத்துப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதற்காக, பற்பல தொழில் வணிக நிறுவனங்கள் அவர்களை எல்லையில்லாமல் இறக்குமதி செய்து கமுக்கமாகப் பயன்படுத்தி வந்து கொண்டும் இருந்தது. ஆனால் தற்போது குடும்ப அட்டையுடன் ஆதார் இணைப்பு, ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை என்கிற ஒன்றிய அரசின் மேலாதிக்க அனுமதியோடு, பொதுவெளியில் தமிழ்மக்களோடு பான்பராக் வாயர்களாக நாகரிகம் இல்லாமல் உலாவருவதுதான் தமிழ்மக்களின் தனித்துவத்தை (பிரைவசியை) பாதிக்கிற விடையமாக ஆகிப்போய் உள்ளது. குடும்ப அட்டையில் ஒன்றிய அரசின் மேலாதிக்கத்தை மறுத்து விட்டாலே, தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக பேசுபொருளாகியுள்ள வட இந்தியர்களின் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும். முனைய வேண்டும் தமிழ்நாடு அரசு. அதற்காக பேசவேண்டும் தமிழ்நாட்டின் அறிஞர் பெருமக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,570.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.