இந்தியப் பொருளாதார மந்த நிலையால், ஊர்தி உற்பத்தி துறை முழுமையாகப் பாதிப்பு, தங்க இறக்குமதி கூட மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது, என்று புலம்பி வந்த நிலையில், தற்போது இந்தியப் பொருளாதார மந்தநிலையின் அடுத்த ஆப்பு இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு என்று தெரியவரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியப் பொருளாதார மந்தநிலையால், மிகப் பெரிய நிறுவனங்கள் கூட இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களை வேலைக்கு எடுக்கத் தயங்கி நிற்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வருவது குறித்து அனைத்து தரப்பிலிருந்து புலம்பல் அதிகரித்துவரும் நிலையில், இப்போது இந்த பொருளாதார மந்த நிலையால், இந்தியாவின் முன்னணி தொழில்;நுட்பக் கழக கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கே வேலை கொடுக்க நிறுவனங்கள் தயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும் நடப்பு மாதத்தில் இருந்தே இந்தியத் தொழில்நுட்பக் கழக பட்டதாரிகளுக்கான வளாக நேர்காணல்கள் எல்லாம் தொடங்கிவிடும். எப்படியும் இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் தங்கள் படிப்பை முடிப்பதற்கு முன்பே கையில் ஒரு பணி நியமன ஆணையை வைத்திருப்பார்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள். ஆனால் இந்தக் கல்வி ஆண்டில் நிலைமை இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரியிலேயே தலை கீழாக தான் இருக்கிறது. பொதுவாக இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் வளாக நேர்காணல் நடத்துவதற்கு அனுமதி கிடைத்த முதல் சில நாட்களிலேயே வந்து, தங்களுக்குத் தேவையான சிறந்த மாணவர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும் பல நிறுவனங்களே கூட தற்போது இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரிகளுக்கு நேர்காணல் நடத்த கூட வரவில்லையாம். இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் இந்த நாட்களில், மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடத்த இருக்கிறோம் என, இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரி அதற்கான துறையில் இருந்து நிறுவனங்களுக்கு தெரிவிப்பார்களாம். ஆனால் இந்த ஆண்டு அப்படி தெரியப்படுத்திய பின்பு கூட வளாக நேர்காணல் நடத்த இந்த நாளில் வருகிறோம் அல்லது இந்த ஆண்டு வருவதாக இல்லை என பதிலே சொல்லாமல் பல நிறுவனங்கள் அமைதியாக இருக்கிறார்களாம். மும்பையில் இருக்கும் இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரிக்கு வந்து, இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுத்து மாணவர்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்க வந்திருக்க வேண்டிய, வேர்ல்ட் க்வாண்ட் என்கிற ஒரு பெரிய முதலீட்டு நிறுவனம் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லையாம். டவர் ரீசர்ச் மற்றும் க்ராவிட்டா ரிசர்ச் போன்ற பல நிறுவனங்களும் இந்த அளவுக்கு அதிக சம்பளத்தை கொடுத்து இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுப்பவர்கள்தானாம். இவர்களும் இதுவரை இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களை வேலைக்கு எடுப்பது குறித்து தகவல் தெரிவிக்கவேயில்லை. உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களும், இதே போல மௌனம் காத்துக் கொண்டுதாம் இருக்கிறார்கள். இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்ற பெரிய கல்லூரிகளில் படித்த மாணவர்களையே வளாக நேர்காணலில் வேலைக்கு எடுப்பது குறைந்தால் மற்ற சாதாரண கல்லூரிகளின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லை. வழக்கமாக இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்லூரிகளுக்கு வந்து ஆட்களை அள்ளிக் செல்லும் நிறுவனங்கள் கூட இந்த முறை வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டுவதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் இந்தியத் தொழில்நுட்பக் கழக நிர்வாக தரப்பினர்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,329.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.